கார்த்தி, கமல், விஜய், ரஜினிகாந்த் என கோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களை இயக்கிய லோகேஷ் தற்போது பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான Aamir Khan-ஐ வைத்து இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் மாநகரம் படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ் தனது சினிமா பார்வை மூலம் தமிழ் சினிமாவில் வேறு ஒரு கோணத்தில் தனக்கென்ற ஒரு பார்முலா வைத்து படத்தை இயக்கி வருகிறார்.
தான் எடுக்கும் படங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கும் விதமாக “லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்” என்ற புது பரிமாணத்தை தமிழ் சினிமாவில் கொண்டுவந்தார்.
தான் எடுத்த மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர்ஸ்டார் நடிகர்களான கார்த்தி, விஜய், கமல் ஹாசன் என இயக்கிய 5 படங்களுக்குள் 3 சூப்பர்ஸ்டார் ஹீரோக்களுடன் பணியாற்றியுள்ளார். தற்போது ரஜினிகாந்த் -ன் கூலி படத்தையும் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகரான அமீர் கான் உடன் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சூர்யா கஜினி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்திருந்தார். மேலும் லகான், 3 இடியட், தூம் 3, PK, தங்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
லோகேஷ், Aamir Khan கூட்டணியில் படம் பான் இந்தியா படமாக இருக்கும் என்றும், மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதகவும் தெரிகிறது.
ஹிந்தி சூப்பர்ஸ்டார் நடிகரான Aamir Khan, தமிழில் சூப்பர் ஹீரோக்களை வைத்து வெற்றி கண்ட லோகேஷ் இருவரும் இணைந்து பணியாற்றும் போது அந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படும்.
கூலி படத்தின் ஷூட்டிங் பல இடங்களில் நடைபெற்று வரும் நிலையில், கைதி 2 படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல் வந்தது. இதற்கிடையில் அமீர் கானை வைத்து இயக்கம் படத்திற்கான பேச்சு வார்த்தை முடிந்து அதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.
ஏற்கனவே தமிழ் இயக்குனர் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதித்து 1000 கோடி வசூல் செய்து ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தை தந்துள்ளார். அந்த வரிசையில் அடுத்ததாக லோகேஷ் இணைவாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.